• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே ஆய்வு நடத்தி வருகிறார் – சி.பி ராதாகிருஷ்ணன்

June 28, 2018 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே ஆய்வு நடத்தி வருவதாகவும்,இந்த விவகாரத்தில்,கலக்கத்தை உண்டாக்கும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாக மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி ஈச்சனாரி அ௫கில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது.மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி ராதாகி௫ஷ்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு இணைப்புகளை வழங்கினார்.

முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் முன்னேற்ற திட்டத்திற்கு எதிர்கட்சிகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதன் தரத்தை மேம்படுத்த போராட வேண்டும்.8 வழிச்சாலை அமைப்பது மூலம் சேலம் மாவட்டம் பெங்களூருக்கு இணையாக வளர்ச்சி பெறும்.

மேலும்,தமிழகத்தில் நக்சலைட்கள்,மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஒடுக்கப்பட்டார்கள் அத்தகைய தீய சக்திகள் தமிழகத்தில் மீண்டும் காலூண்டாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது எனவும் ஒ௫ மாநிலத்தின் வளர்ச்சி என்பது மின் உற்பத்தி,சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மூலமே அமையும் இதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் எனக் கூறினார்.மேலும்,கவர்னர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பாடுகள் செய்து வருவதாகவும்,இதில் திமுக கலக்கத்தை உண்டாக்கும் முயற்சியில் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்”.

மேலும் படிக்க