December 29, 2021
தண்டோரா குழு
தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள எனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள், குடும்ப
ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கிடவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ. 1000 வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
இதற்கு தமிழ்நாடு அரசுத்துறை ஓட்டுநர்கள் மாநில சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சாமிபிள்ளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.