• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபுவுக்கு பாராட்டு விழா

March 9, 2026 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் வெண்ணிலாவின் திரைக்களம் சார்பாகவும் எம்.எஸ்.கே இசைக்குழு சார்பாகவும் சமீபத்தில் தமிழக அரசின் விருது பெற்ற நடிகர் பொள்ளாச்சி பாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சமீபத்தில் தமிழக அரசு 2016- 2022 ஆண்டுக்கான திரைப்பட விருதும்
2014- 2022 ஆண்டிற்கான சின்னத்திரை கலைஞர்கள் விருது அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்படக் கல்லூரியில் பயின்று வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த வந்தவர் பொள்ளாச்சி பாபு. அதிகமான கதாபாத்திரங்கள் கொங்கு தமிழ் பேசி நடிப்பது இவரது தனித்துவம். “தாலாட்டு” என்னும் மெகா தொடரில் சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது அறிவித்தது.

தமிழக அரசின் விருது பெற்று கோவை மண்ணை பெருமை சேர்த்த பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு வெண்ணிலாவின் திரைக்களம் என்ற அமைப்பின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி எம்.எஸ்.கே இசை கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆர்.முத்துகிருஷ்ணன் சி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொள்ளாச்சி நகராட்சி நியமன உறுப்பினர் கவிஞர் முருகானந்தம் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.கே.ராஜு,கராத்தே பஞ்சலிங்கம்,பரமானந்தம்,சகாயராஜ், பழனிச்சாமி,ஆட்டோ ராஜேஷ்,பாலாஜி, பிரேம் உட்பட ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர்க்கு நடிகர் பொள்ளாச்சி பாபு இனிப்பு வழங்கி கௌரவப்படுத்தினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வெண்ணிலாவின் திரைக்களம் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா கே.ரவிக்குமார் வரவேற்றார். கராத்தே பஞ்சலிங்கம் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை பொள்ளாச்சி பாடகி சித்ரா தொகுத்து வழங்கினார்.

மேலும் படிக்க