• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் விற்பனை அதிகரிப்பு

April 28, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் மூலம் உயர்தர வலிமை சிமெண்ட் அன்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய ரக வலிமை சிமெண்ட் அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது. தமிழக அரசின் வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது. இந்த சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டை ரூ.335 மற்றும் ரூ.350 என இரு விலைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கூடுதலாக ரூ.35 வரை போக்குவரத்து செலவுக்கு வசூலிக்கப்படுகிறது. தற்போதைய மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் என்ற பெயரில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் வலிமை சிமெண்ட் விற்பனை தொடர்பாக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் பொதுமேலாளர் (விற்பனை) நர்மதா தேவி தலைமை வகித்தார். விற்பனை மேலாளர் ஜாபர் சாதிக் அலி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் முகவர்கள் தங்களது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து பொதுமேலாளர் (விற்பனை) நர்மதா தேவி கூறுகையில்

‘‘தமிழகம் முழுவதும் வலிமை சிமெண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் வலிமை சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக முகவர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது,’’ என்றார்.

மேலும் படிக்க