• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் வருவாய்துறை பெயர் மாற்றம்

September 14, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் வருவாய்துறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய்துறை பெயரை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய பின்னர் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கும் பணிகளில் வருவாய் துறை இருந்தது. அதன் பின்னர் வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.

மேலும், நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வருவாய்துறை என்பது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என அழைக்கப்படுகிறது.இந்நிலையில் முக்கியமான பணிகளை ஆற்றி வரும் வருவாய்துறையின் பெயரை தமிழகத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து,தமிழக அரசின் வருவாய்துறை பெயரை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க