April 26, 2021
தண்டோரா குழு
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் மால்கள், தியேட்டர்கள், சலூன்கள் முழுமையாக அடைக்கப்பட்டன.
தமிழக அரசு அண்மையில் அறிவித்த கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் கோவையில் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் அதிகம் கூடும் மால்கள், வணிகவளாகங்கள், பெரிய பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் சிறிய காய்கறிகடைகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.மேலும் எளிதில் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ள சலூன்கள் அழகு நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. தேனீர் கடைகள், உணவகங்கள் புதிய கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.