• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு!

July 6, 2019 தண்டோரா குழு

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் பெற உத்தரவிடும் வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க