• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

May 28, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல நாட்களாக போராட்டம் நடந்து வந்தது.கடந்த 22ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் போலீசார் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், இன்று தூப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில்,பொதுமக்களின் உணர்வுகள்,கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.

மேலும் படிக்க