• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு திட்டம்

March 5, 2019 தண்டோரா குழு

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மைதானம் என்ற அடிப்படையில் விளையாட்டு மைதானங்களை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டு மைதானங்களை தனியார் பங்களிப்போடு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மைதானத்திற்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வீரர் வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்திலே தங்கி முழு பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,30 தனியார் கல்லூரிகள் மூலமாக ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க