February 3, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2.05 மணி முதல் 3.45வரை ஒருமணி 40 நிமிடங்களுக்கும், 4ஆம் தேதி இரவு 11.30மணி முதல் 5ஆம் தேதி 1.45மணி வரை இரண்டேகால் மணி நேரமும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரங்களில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட தெற்கு, தென்மத்திய, தென்மேற்கு ரயில்வேக்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்துசெய்தல், இடம் இருப்பது பற்றிய விசாரணை ஆகியவை செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.