March 22, 2018
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்அறிவித்துள்ளது.
8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு அதிகாரிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளதால் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி உறுதியளித்துள்ளதாகவும் அபிராமிராமநாதன் தெரிவித்துள்ளார்.