March 10, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாளை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏற்கனவே கொடுத்திருந்தாலும், நாளைய முகாமிலும் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.