April 7, 2020
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் ஏற்கெனவே 621 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ்,
தமிழகத்தில் இதுவரை 5305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 63 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள்.இந்த எண்ணிக்கையில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 39 பேர். இதுவரை சென்னையில் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கண்காணிப்பில் 253 பேர் உள்ளனர். 28 நாட்கள் காண்காணிப்பு முடிந்து 27,416 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெற்று வந்த 64 வயதான பெண் இன்று சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இருந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 690ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.