January 20, 2018
அதிமுக அம்மா என்ற பெயரில் புதிய கட்சி செயல்பட வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,
“பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருந்தால் கூட, பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நிதி வழங்க வேண்டும்.பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயரும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியாது.
ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்தில் 234 தொகுதயிலும் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது நடைபெறும் வாக்கெடுப்பின் போது பழனிசாமி அரசு வீட்டிற்கு செல்லும்,பழனிச்சாமி மாமியார் வீட்டிற்கு செல்வார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு நாளைக்கு 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.நள்ளிரவில் பேருந்து கட்டணம் அதிகரிதுள்ளது.தமிழகத்தில் 2 கோடி அடித்தட்டு மக்களின் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் தொழில்வளர்ச்சி பின்நோக்கி உள்ளது, வேலை வாய்ப்பு அதிகரிக்க அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,மாறாக பொதுமக்கள் மீது சுமையை சுமத்தி வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை உள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் என்பது சேவை துறை.கல்வித்துறைக்கும் மக்கள் நல்வாழ்வு
துறைக்கும்,நிதி வழங்குவது போல,அடிதட்டு மக்கள் பயணம் செய்யும் போக்குவரத்து துறையில் உள்ள பற்றாக்குறையை அரசு வழங்கி இருக்க வேண்டும்.உடனடியாக அரசு உயர்த்திய பேருந்து கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் .
தமிழக முதல்வருக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற நோக்கிலே போக்குவரத்து துறைக்கு போதிய நிதிஒதுக்காமல் நெடுஞ்சாலைத்துறைக்கும்,பொதுப்பணித்துறைக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படுகிறது.செலவினத்திற்கும் ,வருவாய்க்கும் உள்ள பற்றாக்குறையை அரசு வழங்கி இருந்தால் பொதுமக்கள் மீது இந்த சுமை வந்து இருக்காது.
செலவினம் கூடுவதால் கட்டணம் உயர்த்துவதாக கூறுவது, முதல்வரின் இயலாமையை காட்டுகிறது. அரசு நிர்வாகம் எங்கள் கையில் இல்லை அரசு நிர்வாகம் செயல்படுத்த முடிவில்லை என்ற இயலாமையை காட்டுகிறது.மற்ற மாநில அரசு செயல்பாடு போல சிறப்பான செயல்பாடு தமிழத்தில் இல்லை”.இவ்வாறு அவர் கூறினார்.