• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை

March 20, 2020

தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் பாயும் என காவல்துறை டி.ஜி.பி திரிபாதி எச்சரித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 195 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வரவு வருகிறது.

இந்த நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக¸ தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும் வதந்திகள் பரப்புகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

மேலும் படிக்க