April 6, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எங்கு சென்றதால் பாதிப்பு என்பதைவிட எத்தனை பேர் பாதிப்பு என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.