• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

March 18, 2020 தண்டோரா குழு

டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,திரையரங்குகள், பொழுதுபோக்கு தளங்கள் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோரோனோ அறிகுறி காரணமாக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒருவருக்கு கோரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்தவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இந்த நபருக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க