• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

October 21, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதயதுடிப்பை கட்டுபடுத்தும், அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே இதயத்தில் ஏற்படும் குறைபாடுகள் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது மேலும் இதயத்தில் உள்ள வால்வுகளின் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில்,கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இதய துடிப்பை கட்டுபடுத்தும், வகையிலான கிரையோ அபலேசன் எனும் நவீன வகையிலான கருவி, மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட இந்த கருவியின் பயன்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில்,கே.எம்.சி.எச் மருத்துமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிச்சாமி பேசுகையில்,

அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, போன்ற உணர்வு, தலைசுற்றல் அறிகுறிகள் இருந்தால், உடலின் பிற பாகங்களுக்கு ரத்த ஒட்டம், சுழற்சியாவதை தடுக்கும் எனவும், உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இந்த சீரற்ற இதயத்துடிப்பு உள்ளது, எனவும், இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்,எனவே சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கருவி இங்கே நிறுவப்பட்டு உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய மருத்துவர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் மற்றும் இதயத்துடிப்பு பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் ஆகியோர் கூறுகையில்,

இந்த கருவியை கொண்டு சீரற்ற இதயதுடிப்பை, புதுமையான முறையில் 80 நாடுகளில் ஒரு மில்லியன் நோயாளிகளுக்கு இந்த கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க