May 1, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,082 ஆனது.சென்னையில் இன்று மட்டும் 3,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.மேலும்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 8, திருவள்ளூரில் 6,மதுரையில் 3 , காஞ்சிபுரம்,தஞ்சாவூரில் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,323 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு 2,526 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 9,615 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,29,363 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.தமிழகம் இன்னும் கட்டுப்பாடு வளையத்தில் தான் இருக்கிறது. என்றார்.