• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன்முறையாக கோவையை சேர்ந்த மேஜிக் நிபுணருக்கு ‘குளோபல் ஐகான்’ விருது !

December 9, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் முதன்முறையாக கோவையை சேர்ந்த மேஜிக் நிபுணருக்கு ‘குளோபல் ஐகான் ஆஃப் மெஜிசியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் டிஜோ வர்கீஸ். மேஜிக் செய்வதில் 50க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கவுரவுக்கும் விதமாக இவருக்கு சோசியல் புரொட்டெக்சன் ஆர்கனைசேஷன் சார்பில் குளோபல் ஐகான் ஆஃப் மெஜிசியன் என்ற விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த நிலையில் கோவை வந்த அவரை சக மேஜிக் கலைஞர்கள் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து டிஜோ வர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“இந்த விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபாரம் சார்பில் தமிழக அளவில் மேஜிக் போட்டிகளுக்கு நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன். இதுவரை தொடர்ந்து 4 அரை மணி நேரம் மேஜிக் செய்து சாதனை படைத்துள்ளேன். அடுத்து 8 அரை மணி நேரம் மேஜிக் செய்து சாதனை நிகழ்த்துவேன். இன்றைய காலகட்டத்தில் பல வீடியோக்களில் மேஜிக் ரகசியங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் மேஜிக் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.” என்றார்.

தொடர்ந்து விமான நிலைய வளாகத்திலேயே கார் ஓட்டுநர் ஒருவரை வைத்து பணத்தை மறைய வைத்து மேஜிக் செய்து காட்டி காண்போரை வியக்க வைத்தார்.

மேலும் படிக்க