• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

March 23, 2020 தண்டோரா குழு

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது. பொது போக்குவரத்து, அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்ஸி இயங்காது. அத்தியாவசியமான துறை சார்ந்த அரசு(காவல்துறை, தீயணைப்பு, பால், உணவு), தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும்.வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க