July 3, 2018 
தண்டோரா குழு
                                வட தமிழகம்,தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட திசை மற்றும் வேகமாறுபாட்டின் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.