தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவாசியமாக உள்ள போக்குவரத்து துறை மிகவும் சீர் கெட்ட நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் உள்ள அரசியல் சார்ந்த சங்கங்களும் இதற்கு ஒரு காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கோவையில் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜ அரங்கில் நடைபெற்றது.மண்டல ஒருங்கிணைப்பாளர் வாமன் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வசீகரன்,
தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவாசியமாக உள்ள போக்குவரத்து துறை மிகவும் சீர் கெட்ட நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், போக்குவரத்து துறையில் உள்ள அரசியல் சார்ந்த சங்கங்களும் இதற்கு ஒரு காரணம் என தெரிவித்தார்.தனியார் பேருந்துகள் நல்ல லாபகரமான முறையில் இயங்கி வரும் நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக சீர் கேடு காரணம் எனவும்,எனவே போக்குவரத்து கழகங்களை கலைத்து விட்டு அரசு நேரடி நியமனங்களை செய்ய முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,ஆம் ஆத்மி கட்சி துவங்கி பத்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும்,நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.தொடர்ந்து அவர்,கோவை சிட்ரா பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் துவங்கப்பட்டு, தற்போது அதில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும்,எனவே அவினாசி சாலை சிட்ரா பகுதியில் பணி நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகளை மீண்டும் துவங்க அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாநில மகளிர் அணி பொறுப்பாளர் ஸ்டெல்லா மேரி,மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் ஆண்டனி ,செயலாளர் டோனி சிங்,திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சாகுல் அமீது,சாந்து,ஜாபர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்