• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும்

January 28, 2017 தண்டோரா குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை, ஞாயிற்றுக்கிழமை முதல் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

“வங்கக் கடலில், மன்னார் வளைகுடா அருகில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குமரி கடல் அருகே சனிக்கிழமை நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் அதிகபட்சமாக பம்பான் பகுதியில் 13 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 11 செ. மீ. மழையும் பதிவாகியுள்ளது”
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க