March 15, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது கோவையில் மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைந்துள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும். பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தவர். பாஜகவில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்வு என்பது அவர்களது அரசியல் பின்புலம் மற்றும் அரசியல் சேவை உள்ளிட்டவற்றை கண்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜகவில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பானவர்கள் கொள்கைக்காக உறுதி கொண்டவர்கள் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர் என தெரிவித்தார்.
விரைவில் முக்கிய பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.