July 10, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது, ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய தளர்வுகளாக,தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு காரவகை விற்பனை கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கீழ்கண்டவற்றுக்கு தொடர்ந்து தடை!
– தியேட்டர்
– பார்
– நீச்சல் குளங்கள்
– பள்ளி, கல்லூரிகள்
– உயிரியல் பூங்காக்கள்
– மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து