• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு முதல் முறையாக இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம் !

November 24, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 13 சிறைகளில் உள்ள கைதிகளுக்கு அரசு காப்பீட்டு திட்டங்களின் கீழ் இன்சூரன்ஸ் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 1,133 பேர் பிரதான் மந்திரி சுரக்சா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய இரு மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமல்பபடுத்துவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தமிழக சிறைகளில் உள்ள பெரும்பாலான கைதிகளுக்கு பிரதான் மந்திரி சுரக்சா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய இரு மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களின் முலம் பலன் கிடைக்கும். இந்த காப்பீட்டில் இறப்புக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஊனமுற்றோருக்கான காப்பீடு ஆகியவை அடங்கும். மேலும் தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறையில் சுமார் 3,600 கைதிகள் அடுத்த 20 நாட்களில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள ஆயுள் தண்டனை மற்றும் அதற்கும் குறைவான சிறை தண்டனை பெற்ற கைதிகள் இந்தக் காப்பீட்டைப் பெறுவார்கள் என்றும் சிறைத்துறை தெரிவிக்கிறது. இதுவரை 1,133 பேர் இந்தக் காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்துள்ளனர் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க