May 15, 2018
தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தால் என்ன செய்யப்படுமோ அதேபோல் தான் தற்போதய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.மக்கள் எளிமையாக சந்திக்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.காவிரி விவகாரத்தில் அனைத்து பணியும் நடந்துள்ளது. அதிமுக அழுத்தத்தினால் தான் தற்போது இந்தளவு வந்துள்ளது.மேலும்,எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்ல தான் செய்வார்கள் என்று கூறினார்.