January 21, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வழக்குகளை கையாளுதல், போராட்டங்களை பிரச்சனைகள் இன்றி கையாளுதல், பொதுமக்களிடம் காவல் நிலையத்தில் நடந்து கொள்ளும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரகம் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்களை அறிவித்துள்ளது.
இதில் கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையம் 4212 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தாக திண்டுக்கல், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த காவல் நிலையங்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.முதலிடத்தை பிடித்த கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்தில் வரவேற்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, தாய்மார்கள் அறை, பூங்கா, நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகள் போன்றவை உள்ளது குறிப்பிடத்தக்கது.