April 18, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் 1372 பேருக்கு மொத்தம் கொரோனா பாதித்துள்ளது. இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,363 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 35,036 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% என்ற அளவில் தான் உள்ளது.சென்னையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம்.தமிழகத்தில் கட்டுப்படுத்த பட்ட பகுதிக்குள் மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர், கோவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பரிசோதனை மையங்கள் உள்ளன என்றார்.