April 2, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் கொரானா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 75 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.மொத்தம் உள்ள 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். தமிழ்நாட்டில் 17 கொரானா பரிசோதனை மையங்கள் உள்ளது.மேலும் 6 மையங்கள் இந்த வாரம் இணைக்கப்படும்.இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு பரவியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.86,342 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 77,000-ஆக இருந்த வீட்டுக் கண்காணிப்பு, 86,342-ஆக அதிகரித்து விட்டது என்றார்.