• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு

April 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லியில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது. தமிழகத்தில்வீட்டில் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை – 90,543 டெல்லிமாநாட்டில் கலந்து கொண்ட 422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 4,448 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 407 பேரின் மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை. ஜனவரி 18 ஆம் தேதி முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றார்.

மேலும் படிக்க