April 9, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 96பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ,
தமிழ்நாட்டில் இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை.மொத்தம் 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.புதிய சோதனைக் கருவி மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும் என்றார்.