April 14, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று மேலும்கொரோனா வைரஸ் தொற்று 31 பேருக்கு உறுதி செய்யப்பட்டதுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
1204 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19255. இதுவரை சோதனை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை -15502. வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் -135 பேர். 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68519.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.