March 19, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,திரையரங்குகள், பொழுதுபோக்கு தளங்கள் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோரோனோ அறிகுறி காரணமாக பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு பேருக்கு கோரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.