April 5, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 3000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் தமிழகத்தில் 485 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 25-ம் தேதி மதுரையில் கொரோனா தொற்றுகாரணமாக ஒருவர் பலியானார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட முதல் பலியாக அமைந்தது. அதை தொடர்ந்து நேற்று விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாயினர்.
இந்நிலையில் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. இதனிடையே, சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று(ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.