April 5, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது. டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 39 லட்சம் பேர் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருக்கின்றனர் என்றார்.