April 7, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.இதனை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரையடுத்து தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.மேலும்,கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.