• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கல்வி நிலையில் இருப்பதற்கு கிறிஸ்துவ பள்ளிகள் தான் முக்கிய காரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

February 15, 2021 தண்டோரா குழு

கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வின் போது கிறிஸ்தவ மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.மேலும் கிறிஸ்தவர்களின் முக்கிய பயணமாக விலங்கும் ஜெருசலேம் பயணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஜெருசலேம் செல்பவர்களின் எண்ணிக்கை 500 இலிருந்து 1000 பேர் ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் கல்வி உயர்ந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவ பள்ளிகள் தான் என்று கூறியவர் நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூட விதவை பள்ளிதான் பயின்றார் என்றும் தன்னுடைய மகனும் தற்பொழுது கிறிஸ்தவ பள்ளியில் தான் பயின்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இனி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியவர் இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வழியில் நின்று பயணிக்கும் நமது அரசு எனவே சிறுபான்மை இன மக்கள் இனி கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். தேர்தலில் கூட்டணிகள் மாறினாலும் கொள்கைகள் மாறாது என்றும் நமது அதிமுகவினர் அனைத்து மத நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அவரது பணிகள் மென்மேலும் சிறக்க பாதிரியார்கள் ஆண்டவரை ஜெபித்து ஆசீர்வதித்தனர்.

மேலும் படிக்க