June 10, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் தற்போது உள்ள ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை. பிற மாவட்டங்களில் அதிகாலை நடைப்பயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.