• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை – சீமான்

February 10, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை எனவும் கேரளாவில் ஓட்டுக்கும் பணம் கொடுக்காமல் முறையாக தேர்தல் நடத்தப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமான வரவேற்பு உள்ளது எனவும் அதனால் தான் நாம் தமிழர் வேட்பாளர்களை மிரட்டுவது, கடத்துவது போன்ற சம்பவங்களில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒருபோதும் நியாயமான முறையில் நடந்ததில்லை எனக்கூறிய அவர், வீடு வீட்டுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை எனவும், ஆனால் வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து கணக்கு காட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஹிஜாப் அணியும் பெண்கள் மதராசாவிற்கு செல்ல வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளது குறித்து கேட்ட போது, பூணூலை கழட்டிவிட்டு பள்ளிக்கு வருவார்களா, சீக்கியர்கள் டர்பனை கழட்டிவிட்டு ராணுவத்தில் சேருவார்களா என கேள்வி எழுப்பிய அவர் சீருடை தான் அணிந்து வர வேண்டும் என இதுநாள் வரை சொல்லவில்லை எனவும் இசுலாமியர்கள் எல்லோரும் ஹிஜாப் அணிகிறார்கள், இந்துக்கள் அனைவரும் பூணூல் அணிகிறார்களா என கேள்வி எழுப்பிய அவர் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களது உரிமை எனவும் தெரிவித்தார்.

திராவிட கட்சிகள், ஒன்றிய கட்சிகள் கூட்டத்திற்கு ஆள் கூட்டி வருவது போல் கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்துள்ளனர் எனக்கூறிய அவர் தமிழகத்தில் எந்த இடத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படவில்லை எனவும் மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, அதானி துறைமுகத்திற்கு கற்கள் எடுத்து செல்லப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

மேலும் படிக்க