• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உதயமானது 2 புதிய மாவட்டங்கள்

July 18, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகின்றது.

தமிகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு புதிய மாவட்ட செயல்பாட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க