• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா ; இன்று ஒரேநாளில் 1927 பேர் பாதிப்பு -19 பேர் உயிரிழப்பு

June 10, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,897 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் வந்தவர்களில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1392 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.தனியார் மருத்துவமனையில் 7 பேரும்,அரசு மருத்துவ மனையில் 12 பேரும் பலியாகியுள்ளனர். அதேசமயம்,ஒரேநாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை மொத்தம் 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க