April 20, 2018
தண்டோரா குழு
மின்னணு முறையில் நீதிமன்ற கட்டணங்களை செலுத்தும் இ-ஸ்டாம்பிங் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப் 20) தொடங்கி வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தொடங்கி வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம்,மதுரை கிளையில் அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி விரைவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும்,நிலுவை வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர 149 நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.