• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி

June 4, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 39.55% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 1.14 லட்சம் மாணவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் “நீட்” தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு கடந்த(மே 6)ம் தேதி நடைப்பெற்றது.இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.இந்த தேர்வு முடிவுகளில் பீகார் மாணவி கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,தெலங்கானாவைச் சேர்ந்த ரோகன் புரோகித் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.மேலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12ம் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க