• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று 463 பேருக்கு கொரோனா பாதிப்பு – 6 பேர் உயிரிழப்பு !

February 24, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 2,34,837 ஆக உயர்ந்தது.இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,49,729 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,478 ஆக உள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,33,089 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று 50,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,72,72,643 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க