March 31, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.
சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றுள்ள மீதமுள்ள 616 பேரும் தாங்களாகவே முன்வந்து தகவல் தரவும்: தாங்களாகவே முன்வந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.