June 30, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சென்னையில் 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 60 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்தம் 1201 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இன்று மட்டும் 2,325 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் 38,889 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 30, 242 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,70, 683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.