• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி” – பீலா ராஜேஷ்

April 8, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்தது. டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா உறுதியானவர்கள் – 679 பேர் .டெல்லி சென்று வந்து பாதிக்கப்பட்ட 679 பேரில் 7 பேர் வெளிநாட்டினர்.

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 5 பேர் தவிர மற்றவர்கள் உடல் நலத்துடன் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க