April 26, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் அங்கீகாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் குறித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு,அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக,திமுக,தேமுதிக மட்டுமே என்றும்,மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும்,பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.